'பிரபாகரன் வீட்டில் 'கட்டுமானம்'; கண்காணிக்கின்றது அரசாங்கம்'

'பிரபாகரன் வீட்டில் 'கட்டுமானம்'; கண்காணிக்கின்றது அரசாங்கம்'

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பில் அண்மைக் காலமாக இடம்பெறும் கருத்தாடல்களைக் கண்காணிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் வீட்டில் நூலகம் அல்லது பொதுவான கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கு அவருடைய சகோதரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்காக வல்வெட்டித்துறை நகர சபையில் அனுமதிகோரி விண்ணம் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் நளிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர். இதன்போதே, 'பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. எனினும், இதுவரை அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி