Liberal வேட்பாளராக Doly Begum; தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!

Liberal வேட்பாளராக Doly Begum; தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!

Ontario NDP துணைத் தலைவரும், Scarborough Southwest தொகுதியின் மாகாணசபை உறுப்பினருமான Doly Begum, தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் விரைவில் நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

Doly Begum-ன் பதவி விலகலை Ontario NDP தலைவர் Marit Stiles, செவ்வாய்க்கிழமை (03) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, Scarborough Southwest தொகுதியில் நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தலில், Liberal கட்சி சார்பில் Doly Begum போட்டியிடுவார் என பிரதமர் Mark Carney அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய NDP இடைக்காலத் தலைவர் Don Davies, Doly Begum-ன் Liberal வேட்பாளர் நியமனம் “ஜனநாயகத்தின் மதிப்பை குறைக்கும் செயல்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Doly Begum, 2018 ஆம் ஆண்டு முதல் Scarborough Southwest தொகுதியின் NDP மாகாணசபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அதே தொகுதியின் மத்திய நாடாளுமன்ற உறுப்பினராக 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த Bill Blair, திங்கட்கிழமை (02) தனது பதவியில் இருந்து விலகினார்.

Bill Blair, எதிர்வரும் வசந்த காலத்தில் இங்கிலாந்துக்கான கனடா உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை மத்திய Liberal கட்சியால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது இடைத்தேர்தல் வேட்பாளர் Doly Begum ஆவார். இதற்கு முன்பு, University–Rosedale தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் Dr. Danielle Martin Liberal வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம், முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland தனது பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரது தொகுதி வெற்றிடமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசியலில் இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த அரசியல் மாற்றங்கள், ஒன்ராரியோ மற்றும் மத்திய கனடா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி