மட்டக்களப்பு - குடும்பிமலை பகுதியில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கெட் லோஞ்சர் (Rocket Launcher) வகை துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து குடும்பிமலைப் பகுதியில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த மூன்று ஆயுதங்களும் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.