பிஃபா தொடரை முன்னிட்டு விசா மோசடி; கனடா அரசு கடும் எச்சரிக்கை!

பிஃபா தொடரை முன்னிட்டு விசா மோசடி; கனடா அரசு கடும் எச்சரிக்கை!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரை முன்னிட்டு விசா மோசடிகள் அதிகரித்து வருவதாக கனடா அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிஃபா வீசா என்ற பெயரில் அல்லது உலகக்கோப்பைக்கான சிறப்பு சுற்றுலா விசா என்ற பெயரில் எந்தவிதமான தனிப்பட்ட விசாவும் வழங்கப்படமாட்டாது என கனடா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சுற்றுலா விசா பெற்றவர்களுக்கு கனடாவில் வேலை செய்வதற்கோ அல்லது நிரந்தர குடியுரிமைக்கோ அந்த விசாவை பயன்படுத்த முடியாது என மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2026 பிஃபா உலகக்கோப்பை போட்டிகளை ரசிகராக சென்று பார்ப்பதற்காக கனடா வருபவர்கள் வழக்கமான சுற்றுலா பயணிகளாகவே கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தனி “FIFA உலகக்கோப்பை 2026” விசா என எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்குள் நுழைய விரும்புவோர், தங்களது நாட்டின் அடிப்படையில், Visitor Visa (சுற்றுலா விசா) அல்லது Electronic Travel Authorization (eTA) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பெற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வீசா என்ற பெயரில் கனடாவிற்குள் நுழைவை உறுதி செய்து தருவதாக கூறும் குடிவரவு முகவர்கள் மற்றும் இடைநிலையர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

யாராலும் விசா அல்லது பயண அனுமதி பெறுவதை உறுதி செய்து தர முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தங்கள் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களுக்கும் தாங்களே பொறுப்பு எனவும் பிரதிநிதி ஒருவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாலும், தகவல்கள் அனைத்தும் சரியானவை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறான தகவல் வழங்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை கனடா நுழைவு தடை விதிக்கப்படலாம்,” என கனடா அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி