பட்டப்பகலில் சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக் கொலை!

பட்டப்பகலில் சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக் கொலை!

தலங்கம, அகுரேகொட பகுதியில் அமைந்துள்ள சொகுசு விற்பனை நிலையமொன்றிற்கு முன்பாக இன்று (13) மாலை முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கரந்தெனிய சுத்தா' என்பவரின் நீதிமன்ற வழக்குகளுக்காக முன்னிலையாகி வந்த சட்டத்தரணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டத்தரணி, தனது கட்சிக்காரரான 'கரந்தெனிய சுத்தாவின்' இரகசியத் தகவல்களை, மற்றொரு பாதாள உலகக் கும்பல் தலைவனான 'லொகு பெட்டி' (Loku Patty) என்பவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட பழிவாங்கலாக, கரந்தெனிய சுத்தாவினாலேயே இந்த இரட்டைப் படுகொலை வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தலங்கம, அகுரேகொட பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனத்தில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்தே இன்று மாலை 5 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள், T-56 ரக துப்பாக்கியால் சுமார் 10 தடவைகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பிட்டிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளடங்கிய 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த சட்டத்தரணி, பிரபல பாதாள உலகக் குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தா' என்பவருக்காக நீதிமன்றில் முன்னிலையாகி வந்தவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தனது கட்சிக்காரரான கரந்தெனிய சுத்தாவின் இரகசியத் தகவல்களை, மற்றுமொரு குற்றவாளியான 'லொகு பெட்டி' (Loku Patty) என்பவருக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே, கரந்தெனிய சுத்தாவினால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் பலமான சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும், படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டறிவதற்கும் 10 பொலிஸ் குழுக்கள் தற்போது பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளன.

இன்றைய இந்தத் தாக்குதலுடன் சேர்த்து, இவ்வருடத்தில் இதுவரை இடம்பெற்ற 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலதிகமாகத் தெரிவித்துள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி