'அரச காணியை அடாத்தாக சுவீகரித்தவர்கள் துவக்கால் சுடுவோமென மிரட்டுகின்றார்கள்!'

'அரச காணியை அடாத்தாக சுவீகரித்தவர்கள் துவக்கால் சுடுவோமென மிரட்டுகின்றார்கள்!'

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக

சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த விவசாயிகள் கூறியவை வருமாறு:

"யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி துஃ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்மக் கள் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்து விவசாயம் செய்து வந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

"அத்துமீறி அடைக்கப்பட்ட அந்தக் காணி அரசகாணி எனவும், நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

"ஆரம்ப காலத்தில் இருந்தே பயன் தரும் மரங்களை நட்டு காலாகாலம் நாம் விவசாயம் செய்துவந்த பகுதியை தனி நபர் ஒருவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சுவீகரித்துள்ளார். இந்தப் பகுதிக்கு நாம் செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிஸாரை வைத்துக் கைது செய்வோம் என மிரட்டுகின்றனர்.

"காலா காலம் நாம் பாதுகாத்து வந்த மணல் மற்றும் காடுகள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக ஏனைய இடங்களுக்கு கடத்துகின்றனர். இந்தக் காணி அரச காணியென பிரதேச செயலர் அறிவித்தும் இதுவரை சம்ப்ந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? எமது விவசாய நிலத்தை மீட்டு எம்மிடமே ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி