2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹொக்கி காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கனடா அணி அரைஇறுதிப் போட்டிக்குத் தகுதிய பெற்றுள்ளது. சனிக்கிழமை (பெப் 14) நடைபெற்ற இந்தப் போட்டியில் காயத்திலிருந்து மீண்ட கேப்டன் மேரி-பிலிப் புலின் (Marie-Philip Poulin) மீண்டும் களமிறங்கியமை அணிக்கு வலுசேர்த்தது.
விக்கென்ஹெய்சரின் சாதனையை சமன் செய்த புலின்
கனடா அணியின் நட்சத்திர வீராங்கனை மேரி-பிலிப் புலின், இப்போட்டியில் ஒரு கோலைப் புகுத்தியதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனது 18-வது கோலைப் பதிவு செய்தார். இதன்மூலம், தனது முன்னாள் சக வீராங்கனையான ஹெய்லி விக்கென்ஹெய்சர் (Hayley Wickenheiser) நீண்டகாலமாக நிலைநாட்டியிருந்த ஒலிம்பிக் சாதனை கோல் எண்ணிக்கையை புலின் சமன் செய்துள்ளார்
.ஆட்டத்தின் முக்கிய தருணங்கள்
ஆரம்ப அதிரடி: ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே பிரையன் ஜென்னர் (Brianne Jenner) மற்றும் கிளேர் தோம்சன் (Claire Thompson) ஆகியோர் கோல்களைப் புகுத்தி கனடாவுக்கு 2-0 என முன்னிலை பெற்றுக்கொடுத்தனர்.
ஆதிக்கம்: இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகளில் சாரா ஃபிலியர் (Sarah Fillier) மற்றும் பிளேயர் டர்ன்புல் (Blayre Turnbull) ஆகியோர் தலா ஒரு கோலைப் பெற்று கனடாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஜெர்மனியின் பதில்: கனடாவுக்கு எதிராக விளையாடிய ஒன்பது உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு கோலையும் பெற்றிராத ஜெர்மனி, இம்முறை பிரான்சிஸ்கா ஃபெல்ட்மியர் (Franziska Feldmeier) ஊடாகத் தனது முதலாவது வரலாற்றுப் பதிவைப் பதிவு செய்தது.
அரைஇறுதி வாய்ப்புகள்
குழு ஏ (Group A) பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள கனடா, திங்கட்கிழமை நடைபெறவுள்ள அரைஇறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகள் அரைஇறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவின் பின்னரே கனடா யாருடன் மோதும் என்பது உறுதி செய்யப்படும்.
பின்களம் மற்றும் பாதுகாப்பு
கனடிய அணியின் கோல் காப்பாளர் எமரன்ஸ் மாஷ்மேயர் (Emerance Maschmeyer), ஜெர்மனி அணியின் 10 இலக்குகளைத் தடுத்து நிறுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மறுபுறம், ஜெர்மனி அணியின் கோல் காப்பாளர் சாண்ட்ரா அப்ஸ்ட்ரைட்டர் (Sandra Abstreiter) 38 தடுத்தல்களை மேற்கொண்டு அபாரமாகச் செயற்பட்ட போதிலும், கனடாவின் அதிரடித் தாக்குதலை அவரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.