T20 உலகக் கிண்ணம்; இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான்!

T20 உலகக் கிண்ணம்; இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான்!

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான 26ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி முதலில் களமிறங்கியது இதில் அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்

இஷான் கிஷன் அரை சதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில் பாகிஸ்தானின் சைம் அயூப் சிறந்த முறையில் பந்து வீசியதின் பலனான இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன.

அதன் படி இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து175 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் சரிந்தது. அடுத்தடுத்து ஹர்திக் மற்றும் பும்ரா வீசிய பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்தன.

முதல் 5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பலத்தை நிறுபித்தது இந்திய அணி

இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 12 ஆவது ஓவரிலேயே பாகிஸ்தானின் 07 விக்கெட்டுகள் சரிந்தன. 17 ஒவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்கயை மாத்திரமே பெற்று மண் கவ்வியது பாகிஸ்தான் அணி

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி