பாகிஸ்தானுக்கு தண்ணீர் நிறுத்தப்படும்!

பாகிஸ்தானுக்கு தண்ணீர் நிறுத்தப்படும்!

"ஜம்மு காஷ்மீரின் காண்டி பகு​தி​யில் கட்​டப்​பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறு​தி​யில் நிறைவடை​யும்​போது, பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் நிறுத்​தப்​படும்’’ என மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் ஜாவேத் அகமது ராணா தெரி​வித்​தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்​தாண்டு நடை​பெற்ற பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்​குப்​பின், பாகிஸ்​தானுடன் செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்​பந்​தம் நிறுத்​தப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​தார்.

இது குறித்து காஷ்மீர் நீர்​வளத்​துறை அமைச்​சர் ஜாவேத் அகமது ராணா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ஜம்மு காஷ்மீரின் காண்டி பகு​தி​யில் ஷாபூர் காண்டி தடுப்​பணை திட்​டம் 40 ஆண்​டு​களாக கிடப்​பில் இருந்​தது. இதன் காரண​மாக காஷ்மீரில் 80 கி.மீ தூரத்​துக்கு அமைக்​கப்​பட்ட ரவி நதி நீர் கால்​வாய், 492 கி.மீ தூரத்​துக்கு அமைக்​கப்​பட்ட நீர் விநி​யோக பாதை பயன்​படுத்​தப்​ப​டா​மல் இருந்​தது.

பிரதமர் மோடி​யின் தலை​யீட்​டின் கீழ் இத்​திட்​டம் மாற்​றியமைக்​கப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்​றின் குறுக்கே அமைக்​கப்​படும் நான்கு நீர் மின் நிலைய திட்​டங்​களும் வேக​மாக நடை​பெறுகின்​றன.

மத்​திய அரசின் ரூ.485.38 கோடி மதிப்​பீட்​டில் தொடங்​கப்​பட்ட ஷாபூர் காண்டி தடுப்​பணை திட்​டம் அடுத்த மாதம் 31-ம் தேதிக்​குள் நிறைவடை​யும். இதன் மூலம் ரவி ஆற்​றில் இருந்து பாகிஸ்​தானுக்கு வீணாக செல்​லும் நீர் தடுத்து நிறுத்​தப்​படும்.

இந்த தடுப்​பணை திட்​டம் மூலம் ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்​றும் சம்பா மாவட்​டங்​களில் 32,173 ஹெக்​டேர் நிலங்​களுக்​கும், பஞ்​சாப்​பில் 5,000 ஹெக்​டேர் நிலங்​களுக்​கும் நீர்ப்​பாசன வசதி கிடைக்​கும்​. இவ்​வாறு ஜாவேத்​ அகமது ராணா கூறி​னார்​.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி