எப்ஸ்டீன் கோப்புகளில் 200க்கும் மேற்பட்ட தடவைகள் குறிப்பிடப்பட்ட கனடாவின் மொன்ட்றியல் நகரம்!

எப்ஸ்டீன் கோப்புகளில் 200க்கும் மேற்பட்ட தடவைகள் குறிப்பிடப்பட்ட கனடாவின் மொன்ட்றியல் நகரம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவின் மொன்ட்றியல் நகரம் 200க்கும் மேற்பட்ட தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள தனது விடுமுறை இல்லத்திற்கு அருகில் அமைந்திருந்ததால், மான்ட்ரியல் எப்ஸ்டீனின் கவனத்தில் அடிக்கடி இருந்ததாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2008ஆம் ஆண்டு சிறாரிடம் பாலியல் சேவை கோரிய குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பின்னரும், அவர் கியூபெக்கிற்கு சென்றாரா என்பது தெளிவாக இல்லையெனினும், மான்ட்ரியல் பயணத் திட்டங்களை வகுத்திருந்தது தெரியவந்துள்ளது.

2014 ஜூலை மாதத்தில், மான்ட்ரியலில் நடைபெறும் ஜஸ்ட் போர் லாப் விழாவின் நாஷ்டி ஷோ நிகழ்ச்சியை காண எப்ஸ்டீனின் உதவியாளர் Ritz-Carlton Montreal ஹோட்டலில் இரண்டு முறை அறை முன்பதிவு செய்திருந்ததாகவும், பின்னர் அவை ரத்து செய்யப்பட்டதாகவும் அமெரிக்க நீதித்துறை துறை வெளியிட்ட மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

ஆவணங்களில் மான்ட்ரியல் மற்றும் கியூபெக் பல தடவைகள் குறிப்பிடப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை முக்கியத்துவம் அற்றவை என கூறப்படுகிறது. இருப்பினும், சில கியூபெக் பிரமுகர்களின் பெயர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதேவேளை, பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல்வேறு நபர் களுக்கு அவர்களை விருந்தாக்கிய அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019ல் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி, உலகையே உலுக்கி வருகிறது. ஜெப்ரிக்கு சர்வதேச அளவில் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டார்.

எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, ஆண்ட்ரூ 2001 - 11 வரை பிரிட்டன் அரசின் வர்த்தக துாதராக பணியாற்றியபோது, ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதற்கான சாட்சியங்கள் உள்ளன.

இதையடுத்து, 66வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஆண்ட்ரூவை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆப் யார்க்' போன்ற அரசப் பட்டங்கள் பறிக்கப்பட்டன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி