புதிய கட்சி தொடங்கிய சசிகலா; அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படம் பொறித்த கொடி அறிமுகம்!

புதிய கட்சி தொடங்கிய சசிகலா; அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படம் பொறித்த கொடி அறிமுகம்!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்குபெற்ற ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி.கே. சசிகலா புதிய கட்சி ஒன்றை தொடங்க விருப்பதாக அறிவித்தார்.

மேலும் அவர் கட்சியின் கொடியையும் மேடையில் அறிமுகம் செய்தார். அதிமுகவின் சிவப்பு,வெள்ளை,கருப்பு ஆகிய வண்ணத்தில் அமைந்திருந்த அக்கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி ”கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மேடையில் அவர் பேசியதாவது “சட்டமோ, அதிகாரமோ கொடுக்கும் தீர்ப்பை விட மக்கள் கொடுக்கும் தீர்ப்பே மகத்தானது. ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும், மக்கள் அவர்களை கைவிடவில்லை.

"இப்படியே இருந்தால் நான் மக்களுக்கு துரோகம் செய்ததாக ஆகி விடுவேன். புதிய களத்தை காணப் போகிறோம். புதிய கட்சியை ஆரம்பிக்க போகிறோம். இது ஒரு திராவிட கட்சியாக இருக்கும்” என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி