வர்த்தகம் தொடர்பில் அமெரிக்கா - கனடா இடையில் பேச்சுவார்த்தை!

வர்த்தகம் தொடர்பில் அமெரிக்கா - கனடா இடையில் பேச்சுவார்த்தை!

வர்த்தக விவகாரங்கள் குறித்து அமெரிக்க மற்றும் கனடிய வர்த்தக அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கலந்துரையாடியுள்ளதோடு, வரும் வாரங்களில் அவர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) தெரிவித்துள்ளார்.

வர்த்தக உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாக கனடா முன்வைக்கும் யோசனைகளை பரிசீலிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஃபொக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கின் (Fox Business Network) "மோர்னிங்ஸ் வித் மரியா" (Mornings with Maria) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கிரீர், "எங்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து அவர்கள் சில யோசனைகளைக் கொண்டுள்ளனர். அதற்கு நாங்கள் வெளிப்படையாக இடமளிக்கத் தயாராக இருக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி