ஹைபா வான்பரப்பில் ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைப்பு

ஹைபா வான்பரப்பில் ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைப்பு

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈரான் மீது இன்று நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வடக்கு இஸ்ரேலின் முக்கிய துறைமுக நகரமான ஹைபாவின் வான்பரப்பில் வைத்து, ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.

வானில் புகைக் கோடுகளுடன் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஹைபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி