அவசரகாலச் சட்டம் இரத்து!

அவசரகாலச் சட்டம் இரத்து!

அவசர நிலை சட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ள நிலையில், இன்று (01) முதல் நாட்டில் அமுலிலிருந்த அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவசர நிலையை அறிவித்திருந்தார்.

அதன்படி, தேசிய பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பு, தொடர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, நவம்பர் 28ஆம் திகதி முதல் முழு தீவிலும் அமுலாகும் வகையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.

எனினும், பேரிடர் சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட இந்த அவசர நிலை, பொதுமக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி, நாட்டை நோக்கி ஆற்றிய உரையில் உறுதியளித்திருந்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி