ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளதாகஅமெரிக்க ஜ னாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், கல்ஃப் பிராந்தியத்தை கடந்து செல்லும் எரிசக்தி கப்பல்களுக்கு அரசியல் அபாயக் காப்பீடும், நிதி பாதுகாப்பு உத்தரவாதங்களும் வழங்குமாறு அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்துக்கு (U.S. International Development Finance Corporation) தாம் பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி வழங்கல்களின் சுதந்திரமான கடற்போக்குவரத்தை வாஷிங்டன் உறுதி செய்யும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, Strait of Hormuz-ஐ மூடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு பாதுகாப்பு; ட்ரம்ப் அறிவிப்பு!