காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து: 35 பேர் மீட்பு!

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து: 35 பேர் மீட்பு!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த 35 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

மீட்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படையின் விசேட விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று (04) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பகுதி இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிற்குள் அமையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

எனினும், கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கிடைத்த அவசர தகவலையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை இலங்கை கடற்படை முன்னெடுத்ததாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி