மூழ்கிய ஈரானியக் கப்பல்: 87 பேரின் சடலங்கள் மீட்பு; மேலதிக தகவல்கள் வெளியீடு!

மூழ்கிய ஈரானியக் கப்பல்: 87 பேரின் சடலங்கள் மீட்பு; மேலதிக தகவல்கள் வெளியீடு!

இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கிய நிலையில், சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

"1979ஆம் ஆண்டில் இலங்கை கையொப்பமிட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச உடன்படிக்கைக்கு (International Convention on Maritime Search and Rescue) இணங்க, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன" என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் கப்பல்:

இலங்கையிலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல், தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது.

கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் இன்று (04) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

கடற்படை ஊடகப் பேச்சாளரின் முக்கிய கருத்துக்கள்:

"எமது முதன்மையான நோக்கம் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதாகும். அதன் பின்னரே, இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற முடியும்."

"தற்போது எமது முழுமையான கவனம் எஞ்சியிருப்பவர்களை மீட்பதிலேயே உள்ளது. கப்பலில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்."

"எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கு பாரிய எண்ணெய்ப் படலத்தையே காண முடிந்தது. எனவே, குறித்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது."

"எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 32 பேர் மீட்கப்பட்டு தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே மேலதிக விபரங்களை வழங்க முடியும்."

"கடலில் மிதந்த நிலையில் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை குறித்த கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்."

அமெரிக்க இராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலினால், தென்னிலங்கை கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' போர்க்கப்பலில் பயணித்த சுமார் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் காலி கடற்பரப்பிற்கு அப்பால் குறித்த கப்பல் மூழ்கிய நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது கப்பலில் சுமார் 180 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற 2026 சர்வதேச கப்பற்படை அணிவகுப்பில் (International Fleet Review) பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போதே, ஈரானின் 'IRIS Dena' கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு இலக்காகி கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள ஏனைய மாலுமிகளைத் தேடும் பணியில் இலங்கை கடற்படைக் கப்பல்கள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி