இலங்கை கடற்பரப்பில் அதிகாலை ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு; 101 பேர் மாயம் - 78 பேர் காயம்!

இலங்கை கடற்பரப்பில் அதிகாலை ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு; 101 பேர் மாயம் - 78 பேர் காயம்!

இலங்கையின் தென் கடற்பரப்பில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில், ஈரானிய கடற்

படைக்குச் சொந்தமான 'ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா' எனும் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியுள்ளத் என்று பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 180 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் பயணித்த இந்த 'மௌஜ்' ரக போர்க்கப்பல், இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இது ஒரு வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்கு

தலினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் இருந்தவர்களில் 101 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம்

என அஞ்சப்படுகின்றது. இச்சம்பவத்தில் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 32 மாலுமிகள் மேலதிக சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் விமானப்படையின் ஒரு விமானம் தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாகவே

இத்தாக்குதல் பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளும்

வழங்கப்பட்டு வருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

சர்வதேச கடல்சார் ஒப்பந்தங்களின்படி, மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த மீட்புப் பணிகளை இலங்கை முன்னெடுத்து வருகின்றது என்று கடற்படைப் பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்

படுத்தக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதாக சந்தேகம்!

இலங்கையின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலானது, நாட்டின் கடல் எல்லைக்கு வெளியே வைத்து வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக 'டெய்லி மிரர்' (Daily Mirror) செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 180 மாலுமிகளைக் ஏற்றிச் சென்ற 'IRIS Dena' எனும் குறித்த போர்க்கப்பல், அதிகாலை வேளையில் அவசர உதவி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு தெற்கே சுமார் 25 மைல் தொலைவில் இக்கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் இராணுவப் பதற்றத்தின் ஒரு பகுதியாக இக்கப்பல் இலக்கு வைக்கப்பட்டதா என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த கப்பல் வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் தாக்கப்பட்டிருக்கலாம் என இராஜதந்திர மற்றும் கடல்சார் வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ள போதிலும், இலங்கை அதிகாரிகள் இது குறித்து உத்தியோகபூர்வமாக எதனையும் உறுதிப்படுத்தவில்லை.

"சர்வதேச கடல்சார் கடப்பாடுகளுக்கு இணங்க மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இரண்டு கடற்படைக் கப்பல்களும் விமானமொன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகள் சிகிச்சைக்காக காலி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.