இலங்கைக் கடற்படையின் பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடந்ததா?

இலங்கைக் கடற்படையின் பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடந்ததா?

இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்துக்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச

கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் 101 பேர் காணாமல்போயுள்ளதாக அல்லது காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இத்தகைய பின்னணியில் இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது? இது இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்து கொண்டுவிட்டு அரபிக் கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா? அல்லது இலங்கையை நோக்கி வருகை தந்த கப்பலா?

இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்துக்குள் இத்தகைய தாக்குதல் எப்படி அனும

திக்கப்பட்டது? இந்த விவரங்களை அரசு வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி