தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் பாங்கொக்கி;ற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர்,22மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.
பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது.
தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்தி;;ல் சிக்குண்டுள்ளது.
பாங்கொக்கின் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது டயர்வெடித்ததால் பேருந்து தடுப்புமதில்ஒன்றுடன் மோதியது என மீட்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.