ஈரான் கடற்படையினர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்!

ஈரான் கடற்படையினர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்!

கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரான் கடற்படையினரிலிருந்து ஐந்து பேர் இன்று (06) நண்பகல் வெளியேற்றப்பட்டதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள 27 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுள் சிலரை நாளையளவில் வெளியேற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி பெற்ற ஐந்து கடற்படையினரும், ஈரான் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையால் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த கப்பலை திருகோணமலை துறைமுகம் அருகே கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்குச் சொந்தமான IRINS Bushehr கப்பலில் இருந்த 204 பேரை வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்கள் முதலில் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

அதேவேளை, கப்பலின் பணியாளர்கள் இன்னும் கப்பலிலேயே உள்ளதாகவும் அவர் கூறினார். அவர்களை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்து பின்னர் வெலிசர கடற்படை முகாமிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடற்படை பணியாளர்களின் மேற்பார்வையில் அந்தக் கப்பலை இன்று திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRINS Bushehr கப்பல் இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து மனிதாபிமானக் கொள்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலங்கைக்கு நுழைய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாக நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி