ஈரானின் ஆன்மிகத் தலைவர் அலி காமேனி (Ali Khamenei) கொல்லப்பட்ட சம்பவத்துக்கான திட்டத்தை உருவாக்கும் போது, இஸ்ரேல், தெஹ்ரான் நகரின் கண்காணிப்பு கமெரா அமைப்புகளில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த தரவுகளை திருடியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்த தரவுகளின் மூலம் கமேனியின் தினசரி நகர்வுகள், அவர் பயன்படுத்திய வாகனங்களின் நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பணிப்பகுதி மாற்றங்கள் உள்ளிட்ட நுணுக்கமான தகவல்கள் வரை கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தரவு வலையமைப்பு ஒன்றை Mossad அமைப்பின் “8200” எனப்படும் பிரிவு உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட நாளில் கமேனியின் அலுவலகத்தில் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அங்கு இருந்த உளவாளிகளின் உதவியுடன் தாக்குதல் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய தாக்குதல் நிகழும் என ஈரான் எதிர்பார்க்காத மதிய நேரத்தில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும், தாக்குதல் தொடங்கிய முதல் மணித்தியாலத்திலேயே கமேனி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்கள், டெஹ்ரானில் அமைந்துள்ள ஈரான் ஆட்சித் தலைமையக வளாகத்தில் கமேனிக்காக அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி இராணுவ பாதுகாப்பு பங்கரை அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கமேனியை கொலை செய்யும் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே தயாரிக்கப்பட்டதாகவும், அதை சுமார் ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் Israel Katz தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“கமேனியை கொலை செய்யும் முடிவை கடந்த ஆண்டு நவம்பரில் எடுத்தோம். அதுகுறித்து எங்கள் இராணுவத்துடனும் Mossad அமைப்புடனும் ஆலோசனை நடத்தினோம். பி
ன்னர் பிரதமர் Benjamin Netanyahu மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கிடையேயான கலந்துரையாடல்களிலும் இது குறித்து பேசப்பட்டது.
அதே நேரத்தில் ஈரானில் போராட்டங்களும் தொடங்கின. ஈரான் எங்களை முன்னதாகத் தாக்கக்கூடும் என்ற சந்தேகமும் இருந்தது. அதனால் இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.”
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்தபடி United States மற்றும் Israel இணைந்து ஈரான்மீது தாக்குதல் தொடங்கியதற்கு இன்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது.
சுமார் 40 ஆண்டுகளாக ஈரானை ஆட்சி செய்த ஆன்மிகத் தலைவர் கமேனியையும் சேர்த்து, ஈரான்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Iranian Red Crescent Society வெளியிட்ட தகவலின்படி, இந்த போரினால் ஈரானில் பொதுமக்களின் 3,090 வீடுகள் அழிந்துள்ளன. மேலும் மருந்தகங்கள் மற்றும் ரெட் கிரசென்ட் மையங்கள் உள்ளிட்ட சுமார் 600 இடங்கள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான்மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. United States Central Command வெளியிட்ட தகவலின்படி கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரானின் அடுத்த தலைவரை தாம் விரும்பும் விதத்தில் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், கமேனியின் மகன் அந்த நாட்டின் ஆன்மிகத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு தாம் எதிர்ப்பதாகவும் Donald Trump தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் இராணுவத்திடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானும் அண்டை நாடுகள்மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் Tel Aviv நகரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முதல் முறையாக ஈரானில் தயாரிக்கப்பட்ட “கரம்ஷா–4” க்ரூஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அந்த தாக்குதலாகக் கூறப்படும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
எனினும், ஈரான் மேற்கொண்ட எந்தத் தாக்குதலாலும் தங்களது நாட்டிற்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட கரம்ஷா ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கக்கூடிய நவீன ஏவுகணையாகக் கருதப்படுகிறது. சுமார் 2,000 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடிய இந்த ஏவுகணை 1.5 டன் எடையுள்ள வெடிபொருள்களை சுமந்து செல்லக்கூடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.