ஈரான் சரணடையும் வரை ஒப்பந்தம் இல்லை – டிரம்ப்

ஈரான் சரணடையும் வரை ஒப்பந்தம் இல்லை – டிரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஐக்கிய அமெரிக்க இராச்சிய நிர்வாகம், ஈரானுடன் “முழுமையான நிபந்தனையற்ற சரணடைவு” (Unconditional Surrender) கிடைக்கும் வரை எந்த உடன்பாடும் ஏற்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஈரான் ஜனநாயக நாடாக மாறுகிறதா இல்லையா என்பது குறித்து தாம் கவலைப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு பதிலாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு கூட்டாளி நாடுகளுடன் நல்லுறவு பேணும் தலைமை ஈரானில் உருவாக வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா எச்சரிக்கை

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres), இந்த போர் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “இந்நிலைமை யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவிக் கொள்ளும் அபாயம் உள்ளது. உடனடியாக தீவிரமான தூதரக பேச்சுவார்த்தைகள் தேவை,” என்றார்.

லெபனானில் தாக்குதல்கள்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்ததன்படி, பெய்ரூட் நகரின் டாஹியே (Dahieh) பகுதியில் உள்ள ஈரான் தொடர்புடைய கட்டளை மையம் ஒன்றை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களால் Lebanon நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து இலட்சத்திற்கும் (500,000) அருகில் சென்றுள்ளதாக அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாஸ்கோ – தெஹ்ரான் பேச்சு

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோர் தொலைபேசி வழியாக இன்று கலந்துரையாடினர்.

இரு நாடுகளும் தொடர்ந்தும் தொடர்புகளை பேண ஒப்புக்கொண்டதாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் TASS தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பகுதிகளுக்கு அருகில் தாக்குதல்கள் –  விசாரணை

CNN வெளியிட்ட விசாரணை அறிக்கையின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் பாதுகாப்பு கட்டமைப்புகளை மட்டுமன்றி பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களுக்கும் அருகில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள ஈரானின் அரச ஊடக நிறுவனம் Islamic Republic of Iran Broadcasting (IRIB) அலுவலக வளாகத்தில் சுமார் 40 அடி அகலமுள்ள பெரிய வெடிப்பு குழி ஒன்று உருவானது.

செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இது சுமார் 2,000 பவுண்ட் எடையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு குழி, காந்தி ஹொஸ்பிடல் என்ற மருத்துவமனையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் வெளியான காணொளிகளில் உடைந்த கண்ணாடிகள், இடிந்த சுவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்படுவது காணப்படுகிறது.

மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்

செயற்கைக்கோள் படங்களின்படி காவல்துறை தலைமையகமும் தாக்கப்பட்டு பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. அருகிலுள்ள பல மருத்துவமனைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீடியோக்கள் காட்டுகின்றன.

முன்னாள் அமெரிக்க இராணுவ விமான தாக்குதல் கட்டுப்பாட்டு அதிகாரி வெஸ் பிரையன்ட் (Wes Bryant),

“இது 2,000 பவுண்ட் குண்டு போன்ற சக்திவாய்ந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்,” என தெரிவித்துள்ளார்.

பள்ளி தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஒரு பள்ளி நேரடியாக தாக்கப்பட்டதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்ட மாணவர்களும் பணியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த பள்ளி அருகில் ஒரு ஈரான் இராணுவ தளம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை அந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஐக்கிய அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஆகிய எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.

மேலும் cலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organization) தெரிவித்ததன்படி, ஈரானில் மருத்துவ வசதிகள் மீது நடத்தப்பட்ட குறைந்தது 13 தாக்குதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி