Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

கனடியப் பிரதமர் மார்க் கார்னியை 'எதிர்கால ஆளுநர்' என வர்ணித்தார் டொனால்ட் டிரம்ப்!

கனடியப் பிரதமர் மார்க் கார்னியை 'எதிர்கால ஆளுநர்' என வர்ணித்தார் டொனால்ட் டிரம்ப்!

கனடியப் பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney) "கனடாவின் எதிர்கால ஆளுநர்" (Future Governor of Canada) என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவொன்றை இட்டிருந்த டிரம்ப், அமெரிக்காவின் ஏனைய மாநில ஆளுநர்களுடன் இணைந்து "மகா ஏரிகளை" (Great Lakes) ஆசியக் கெண்டை மீன்களின் (Asian Carp) ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பது குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போதே, ஒரு நாட்டின் பிரதமரை வெறும் ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு நிகராகக் குறிப்பிட்டு அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்தப் பதிவு, கனடாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, ஒரு நாட்டின் தலைவரை அமெரிக்காவின் ஒரு மாநில ஆளுநரைப் போன்று விளித்திருப்பது இராஜதந்திர ரீதியில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.