மத்திய கிழக்கு போர்: ரஷ்யாவின் தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோல்வி - ஈரானுக்கு எதிரான யோசனைக்கு 13 நாடுகள் ஆதரவு

மத்திய கிழக்கு போர்: ரஷ்யாவின் தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோல்வி - ஈரானுக்கு எதிரான யோசனைக்கு 13 நாடுகள் ஆதரவு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் (UNSC) கொண்டு வரப்பட்ட தீர்மானம் போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்து வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கண்டித்து பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்துள்ளன.

கூட்டு ஆதரவு: இந்தத் தீர்மானமானது 135 நாடுகளின் இணை அனுசரணையுடன் (Co-sponsorship) சமர்ப்பிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலவரம்: பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. இருப்பினும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டன.

கோரிக்கை: ஜோர்தான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் பாரிய இராணுவத் தாக்குதல்கள் குறித்து எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி