அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதைத் தவிர்க்குமாறு பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு ஈரானிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஹமாஸ், இந்தப் போரை நிறுத்துவதற்குச் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்ட மீறல் குறித்த கண்டனம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என ஹமாஸ் அமைப்பு இதன்போது ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் தாக்குதல்கள் அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக் கூடாது என்பதில் தாம் அக்கறை கொண்டுள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ள போதிலும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஒரு 'பயங்கரவாத அமைப்பாகப்' பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவும் போர் பதற்றமானது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளையும் உள்ளீர்க்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ள நிலையிலேயே, ஹமாஸின் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.