யுத்தத்திற்காக 200 பில்லியன் டொலர் நிதி கோரும் பென்டகன்; வெள்ளை மாளிகைக்கு அவசர வேண்டுகோள்!

யுத்தத்திற்காக 200 பில்லியன் டொலர் நிதி கோரும் பென்டகன்; வெள்ளை மாளிகைக்கு அவசர வேண்டுகோள்!

ஈரானுடனான தற்போதைய போர் நடவடிக்கைகளுக்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை அங்கீகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் (Pentagon) வெள்ளை மாளிகையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

'வொஷிங்டன் போஸ்ட்' (Washington Post) பத்திரிகையை மேற்கோள் காட்டி அரச நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த நிதித் தொகையானது ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவுகளை விடவும் மிக அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

போரில் பயன்படுத்தப்படும் அதிமுக்கியமான ஆயுதங்களின் உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதே இந்த நிதி கோரிக்கையின் பிரதான நோக்கமாகும்.

கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பென்டகன் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளைக் கோரியுள்ளது. இந்த புதிய 200 பில்லியன் டொலர் கோரிக்கையானது அமெரிக்கக் கொங்கிரஸில் (Congress) பாரிய அரசியல் மோதலை உருவாக்கும் என வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானுடனான மோதல் நீண்டகாலம் தொடரக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் தனது இராணுவத் தயார்நிலையை வலுப்படுத்த இந்த அதிரடி நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்துள்ளது.