செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு திகதி அறிவிப்பு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு திகதி அறிவிப்பு!

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை.

2024ஆம் ஆண்டு முதல் இதுவரை 239 மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிலும் தற்போதைய அரசாங்க காலப்பகுதியில் மாத்திரம் 224 மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 17 மாத காலப்பகுதியிலேயே குறித்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 15 உடல்களே மீட்கப்பட்டன.

எனவே, உரிய வகையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை நிரூபனமாகியுள்ளது. ஆகவே அரசாங்கத்திற்கு சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

30 வருடங்களுக்கு மேலாகவ வழக்கு விசாரணை இடம்பெறுகின்றது. எனவே, சந்தேகம் ஏற்பட்டதற்காக ஒருவரை சென்று கைது செய்ய முடியாது. இந்த விடயத்தை கவனமாக கையாள வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.