உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார்

உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார்

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார்.

அவர் காலமான போது அவருக்கு 86 வயது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணரான சக் நோரிஸ், ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர்.

1940 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பிறந்த இவர், 1958 முதல் 1962 வரை அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியுள்ளார்.

அதன்பின்னர் விமானப்படையிலிருந்து விலகி நடிப்புத்துறையில் தடம் பதித்தார்.

குறிப்பாக, 1972ஆம் ஆண்டு புரூஸ் லீயுடன் இணைந்து "Way of the Dragon" திரைப்படத்தில் அவர் நடித்த சண்டைக் காட்சி, அவர் உலகம் முழுவதும் பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது.