அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் போர்ட் ஆர்தர் (Port Arthur) பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக வீடுகளுக்குள் இருக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் மாகாண அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த வெடிப்பைத் தொடர்ந்து வான்பரப்பில் கரும்புகை சூழ்ந்துள்ளது. வெடிப்புச் சத்தத்தினால் அருகிலுள்ள வீடுகள் கூட அதிர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, இந்த வெடிப்புச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
காற்றின் தரம் (Air Quality) குறித்து தீவிர அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.