கொலம்பியா விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவ அதிகாரிகளை ஏற்றிச் சென்ற 'ஹெர்குலிஸ்' (Hercules) ரக விமானமே நேற்று கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் 114 இராணுவ அதிகாரிகளும், 11 ஊழியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.