Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி - அநுர கலந்துரையாடல்!

மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மோடி - அநுர கலந்துரையாடல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவும் தற்போதைய சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மீளாய்வு செய்தனர்.

பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, பொதுவான சவால்களை முறியடிக்க இரு நாடுகளும் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக இணைந்து செயற்பட உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.