கனடாவின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது!

கனடாவின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது!

கனடாவின் மத்திய அரசாங்கத்தின் (Federal) குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) அதிகரிக்கப்பட உள்ளது.

தற்போது ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் 17.75 டொலர்களிலிருந்து 18.15 டொலர்கள் வரை இந்த ஊதியம் அதிகரிக்கப்படும் என கனடா வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திணைக்களம் (ESDC) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஊதிய அதிகரிப்பு மத்திய அரசினால் ஒழுங்குபடுத்தப்படும் பின்வரும் துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்:

விமானப் போக்குவரத்து (Air Transportation)

வங்கிச் சேவைகள் (Banking)

பெரும்பாலான மத்திய அரச நிறுவனங்கள் (Federal Crown Corporations)

துறைமுகங்கள் (Ports)

தொலைத்தொடர்பு (Telecommunication)

மற்றும் ஏனைய மத்திய அரசு சார்ந்த தொழில்களுக்கும் இது அமுலாகும்.