மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை ஏற்கனவே “கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாகவும்”, உலகம் தற்போது ஒரு “மகா யுத்தத்தின் (Large-scale war) விளிம்பில் இருப்பதாகவும்” ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே "மிகப் பொருத்தமான காலம்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதலுடன் தொடர்பில்லாத அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அவர் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"தற்போது செய்ய வேண்டியது போர் மோதல்களைத் தீவிரப்படுத்துவது அல்ல, மாறாக ராஜதந்திர (Diplomatic) தீர்வுகளை நோக்கி நகர்வதாகும்.
சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளித்து, அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்" என பொதுச்செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.