அமெரிக்காவின் ஏபிரகாம் லிங்கன் கப்பலில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சி!

அமெரிக்காவின் ஏபிரகாம் லிங்கன் கப்பலில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சி!

ஈரானின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்காக, USS ஏபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பல் பிராந்திய கடல் எல்லையிலிருந்து தனது வான்வழிச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானிய இராணுவத்தினால் குறித்த போர்க்கப்பலைக் குறிவைத்து குரூஸ் (Cruise) ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக கப்பலின் இருப்பிடத்தை மாற்ற வேண்டியிருந்தது என்றும் ஈரான் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதால் அதன் அமைவிடம் மாற்றப்பட்டதாக ஈரான் உரிமை கோரியிருந்தது.

எவ்வாறாயினும், தமது இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், திட்டமிட்டபடி ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் கப்பலிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.