ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு - 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு - 17 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பெய்த கடுமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் இடியுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 147 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 80 கிலோமீட்டர் தொலைவிலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.