உலக சந்தையில் அலுமினியத்தின் விலை உயர்வு!

உலக சந்தையில் அலுமினியத்தின் விலை உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இரண்டு பிரதான அலுமினிய உற்பத்தி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, அலுமினியத்தின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.

முக்கிய விபரங்கள் வருமாறு:

விலை அதிகரிப்பு:

மின்சார உபகரணங்கள், பொதியிடல் (Packaging), கட்டுமானத் துறை மற்றும் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலோகமான அலுமினியத்தின் விலை, நேற்று (30) லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, ஒரு மெட்ரிக் தொன் அலுமினியத்தின் விலை 3,401 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA):

இப்பிராந்தியத்தின் முன்னணி உற்பத்தியாளரான இந்த நிறுவனம், அபுதாபியில் உள்ள தனது உற்பத்தி மையம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அலுமினியம் பஹ்ரைன் (Alba):

இதேவேளை, பஹ்ரைன் அலுமினியம் நிறுவனமும் தனது உற்பத்தி மையத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தற்போது மதிப்பீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.