ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்காமலேயே ஈரான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, ஆசிய சந்தையில் மந்தகதியில் இருந்த எண்ணெய் விலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 1% இற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
மே மாதத்திற்கான அதன் எதிர்கால விலை 1.22 டொலர்கள் (1.08%) குறைந்து ஒரு பீப்பாய் 111.56 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதன் விலை 98 சதம் (0.95%) குறைந்து ஒரு பீப்பாய் 101.90 டொலர்களாகக் காணப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை பெருமளவில் மூடப்பட்டிருந்தாலும், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்த தான் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளதாக 'தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் இந்த நீர்வழியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அமெரிக்கா "நிர்மூலமாக்கும்" என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைத் தாங்கிச் செல்லும் இந்த நீரிணை மூடப்பட்டதால், மார்ச் மாதத்தில் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 59% அதிகரித்துள்ளது. இது வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய விலையேற்றமாகும்.
குவைத் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 'அல் சால்மி' (Al Salmi) எனும் எண்ணெய் கப்பல் துபாய் துறைமுகத்தில் வைத்து ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால் விலை தற்காலிகமாகக் குறைந்துள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பும் வரை விலையில் நிலையான மாற்றங்கள் ஏற்படாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அத்துடன், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால் விநியோகத் தட்டுப்பாடு தொடரும் என SS WealthStreet நிறுவனத்தின் நிறுவனர் சுகந்தா சச்தேவா தெரிவித்துள்ளார்.