Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

700% இலாபம் ஈட்டிய தாய் கிழவி!

700% இலாபம் ஈட்டிய தாய் கிழவி!

ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'தாய் கிழவி' படத்தின் இறுதி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன என்பதன் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு மவுசு எகிறியுள்ளது. காரணம் கதை தான். நல்ல கதையுள்ள படங்களுக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஸ்டார் நடிகர்களின் படமாகவே இருந்தாலும் கதை சரியில்லை என்றால் ஃபிளாப் தான்.

அப்படியாக சின்ன பட்ஜெட்டில் உருவாகி மக்களை அதிகம் கவர்ந்த திரைப்படம் 'தாய் கிழவி'. ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'தாய் கிழவி'. அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம்புலி, முனிஷ்காந்த், ரேச்சல் உள்ளிட்டோர் முக்கியத கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸான இப்படம், முதல் நாளில் இருந்தே மக்கள் கூட்டத்தை ஈர்க்கத் தொடங்கியது.

கிராமத்து கதை, ராதிகாவின் அசத்தலான நடிப்பு, குறையில்லாத காமெடி சீன்ஸ், செண்டிமெண்ட் கொஞ்சம், சஸ்பென்ஸ் என திரைக்கதையில் வர்ணஜாலத்தை காட்டி தனது முதல் படத்திலேயே வெற்றி கண்டுள்ளார் இயக்குநர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தாய் கிழவி திரைப்படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தியேட்டரில் ரிலீஸாகி தொடர்ந்து 31 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அதன்படி இப்படம் மொத்தம் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மெகா வசூல் வேட்டை நடத்தி தயாரிப்பாளருக்கு 700 சதவீதம் அதாவது 8 மடங்கு லாபத்தை தாய் கிழவி திரைப்படம் பெற்றுத்தந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாய் கிழவி விரைவில் ஓடிடி தளத்தில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.