1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனளையத் தொடர்ந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணி திங்கட்கிழமை (30.03.2026) முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணி சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, உள்ளிட்ட பலர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதற்போது குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். திங்கட்கிழமை நண்பகல் 12 மணிவரைக்கும் அப்பகுயில் எதுவித எலும்புக்கூடுகளோ அல்லது தடையப் பொருட்களோ மீட்கப்பட்டிருக்கவில்லை.
குருக்கள்மடத்தில் இருக்கின்ற மனிதப் படுகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கிலே அடையாளப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அந்த இடத்தை ஏற்கனவே ரெடார் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு நிலத்திற்கு கீழே அடையாளப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் கட்டளைக்கு ஏற்ப முதற்கட்ட நடவடிக்கையாக இந்த பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு சுமார் 5 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவை கொண்ட பிரதேசத்தில் அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இடத்தை சுமார் 9 அடி ஆழத்திற்கு அகழ்வதற்கு ஆரம்பத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது பகுதிகளாக பிரிக்கப்பட்டு தற்போது ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் முதல் படியை எடுத்து சல்லடை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பணி இன்றிலிருந்து எதிர்வருகின்ற ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று மாலை 8 மணி வரைக்கும் நடவடிக்கையை தொடர்வதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருக்கின்றார்.
இந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு இந்த அகலும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்நிலையில் இன்னும் சிலரால் வேறு பகுதிகளும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆரம்பகட்ட நடவடிக்கையாகதான் இந்த குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு காலங்கள் தாழ்த்தி போனாலும் கூட அதற்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் இங்கே பிரசன்னமாகி இருக்கின்றார்கள். ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக இந்த எமது குரல்கள் இயக்க அமைப்பு ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் சட்டத்தரணிகளாக அவர்களை பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
துரிதமாக எல்லோரும் ஒத்துழைத்து இந்த நடவடிக்கை செய்து கொண்டிருக்கின்றார்கள். பிரதேச சபையும் எனக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனக்கு உதவுகின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒரு நியாயமும் நீதியும்மான காலம் தாழ்த்தப்பட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது தொடர்ந்து நாங்கள் என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். என்ன குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ஜபீர் ராசி முகமட் இதன்போது தெரிவித்தார்.