கத்தார் கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் அடையாளம் தெரியாத தரப்பினரால் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவாண்மை (UKMTO) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் காரணமாக கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இருப்பினும், கப்பலில் இருந்த ஊழியர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது போன்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஒரு நாளைக்கு முன்னர், டுபாய் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த மற்றுமொரு பெரிய எண்ணெய் கப்பல் மீது ஈரான் தரப்பிலிருந்து ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.