அமெரிக்கத் தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கான சமூக ஊடக சோதனைகளை விரிவுபடுத்துகிறது

அமெரிக்கத் தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கான சமூக ஊடக சோதனைகளை விரிவுபடுத்துகிறது

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது விசா சேவைகள் தொடர்பாகப் புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, குடியேற்றமற்ற விசா (Non-immigrant visa) விண்ணப்பதாரர்களுக்கான சமூக ஊடகப் பரிசோதனைத் தேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

1. நடைமுறைக்கு வரும் திகதி:

மார்ச் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பரந்த அளவிலான விசா பிரிவுகளுக்கு இந்தச் சமூக ஊடக ஆய்வுச் செயல்முறை (Vetting process) பொருந்தும்.

2. பாதிக்கப்பட்ட விசா பிரிவுகள்:

பின்வரும் விசா பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரும் தங்களது சமூக ஊடகக் கணக்குகளை "பொது" (Public) நிலைக்கு மாற்ற வேண்டும்:

A-3, C-3 (வீட்டுப் பணியாளராக இருந்தால்)

G-5, H-3 மற்றும் அவர்களின் H-4 சார்ந்திருப்பவர்கள் (Dependents)

K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, மற்றும் U.

3. விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்:

இந்த விசா பிரிவுகளின் கீழ் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி:

விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து சமூக ஊடக கணக்குகளின் (Social Media Profiles) தனியுரிமை அமைப்புகளை (Privacy Settings) "Public" அல்லது "Open" நிலைக்கு மாற்ற வேண்டும்.

இந்த மாற்றமானது அவர்களது விசா நேர்முகத் தேர்வுக்கு (Visa Interview) முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.