Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

நுவரெலியாவில் நால்வருக்கு மரண தண்டனை!

நுவரெலியாவில் நால்வருக்கு மரண தண்டனை!

நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு கொலை வழக்குகள் தொடர்பில், நான்கு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவினால் இன்று (02) இந்தத் தீர்ப்பு அறிவிக்கட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு நாணுஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த 47 வயதுடைய குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு பட்டிப்பொல பகுதியில் தனது தாய், மனைவி மற்றும் பிள்ளையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 55 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1990ஆம் ஆண்டு பொவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 64 மற்றும் 62 வயதுடைய இருவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.