Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

இலங்கையில் 147 வெளிநாட்டவர்கள் கைது!

இலங்கையில் 147 வெளிநாட்டவர்கள் கைது!

இணையவழி நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 147 வெளிநாட்டவர்களையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (03) குறித்த சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலாபம், இரணவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 133 சீனப் பிரஜைகளும், 13 வியட்நாம் பிரஜைகளும், ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.