ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்!

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்!

ஈரான் வான்பரப்பிற்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து பென்டகன் அல்லது அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.