Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானின் உருக்கு உற்பத்தி 70% அழிவு!

இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானின் உருக்கு உற்பத்தி 70% அழிவு!

தமது தாக்குதல்கள் காரணமாக ஈரானின் உருக்கு (Steel) உற்பத்தித் திறனில் சுமார் 70 வீதம் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானின் உருக்கு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

"எமது அமெரிக்க நண்பர்களுடன் இணைந்து, ஈரானின் பயங்கரவாத ஆட்சியை நாம் தொடர்ந்து ஒடுக்கி வருகிறோம். நாம் தளபதிகளை நீக்கி வருகிறோம், பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறோம்.

"இது ஈரானிய புரட்சிகர இராணுவப் படையின் (IRGC) நிதி ஆதாரங்களையும், பெருமளவிலான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறனையும் முடக்கும் ஒரு பாரிய வெற்றியாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் இன்றும் (03) இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் குவைத் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் (Oil Refinery) ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.