Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

காணாமல் போன அமெரிக்க விமானி மீட்பு!

காணாமல் போன அமெரிக்க விமானி மீட்பு!

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்திலிருந்து காணாமல் போன அமெரிக்க விமானி மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle ரக விமானம் வீழ்த்தப்பட்டதை அடுத்து, அமெரிக்காவால் மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை (Search and Rescue) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானி காணாமல் போயிருந்த காலத்தில், "எதிரி நாட்டு விமானியை" பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.

மீட்கப்பட்ட விமானி ஈரானின் கடினமான மலைப்பகுதியொன்றில் இருந்ததாகவும், அவர் காயமடைந்துள்ள போதிலும் விரைவில் குணமடைவார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்ததோடு, இந்த மீட்புப் பணியில் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான இந்த மோதலுக்குப் பிறகு, ஈரானிய நிலப்பரப்பில் வீழ்ந்த முதலாவது அமெரிக்க விமானம் இதுவாகும்.

எவ்வாறாயினும், தாம் ஏற்கனவே மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.