Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை!

ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'தாக்குதல் தொடர்பான உண்மைகள்' வெளிவர வேண்டும் என்பதே இந்தப் பிரார்த்தனை தினத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் உண்மைக் காரணங்கள் இறைவனால் வெளிப்படுத்தப்பட வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல்களை முன்வைக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.