அமெரிக்காவின் கடற்படை முற்றுகையையும் (Naval Blockade) மீறி, இரண்டு ஈரானிய கப்பல்கள் அந்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து வெளியேறியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிபிசி (BBC Verify) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
வெளியேறிய கப்பல்கள் குறித்த விபரங்கள்:
சரக்குக் கப்பலான இது, ஹோர்முஸ் ஜலசந்திக்கு கிழக்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஈரானின் சபாஹார் (Chabahar) துறைமுகப் பகுதியிலிருந்து ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியேறியுள்ளது.
எந்தவித சரக்குகளும் இன்றி இக்கப்பல் தற்போது பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
கொள்கலன் காவி கப்பலான இதுவும் ஏப்ரல் 13 ஆம் திகதி சபாஹார் துறைமுகப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளது.
அமெரிக்காவின் முற்றுகை அமுலுக்கு வந்த பின்னர், கிழக்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த இக்கப்பல் தற்போது இந்தியாவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் காணப்படுகின்றது.
இது சீனாவின் ஜுஹாய் (Zhuhai) துறைமுகத்தை நோக்கிப் பயணிப்பதாக சமிக்ஞைகளை வௌியிட்டு வருகின்றது.
இந்த இரண்டு கப்பல்களும் ஈரானியக் கொடியின் கீழ் பயணிக்கின்ற போதிலும், அமெரிக்க முற்றுகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் ஈரானியக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பை நோக்கிப் பயணிப்பது இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.