அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை - ஈரானிடமிருந்து பலமான எச்சரிக்கை!

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லை - ஈரானிடமிருந்து பலமான எச்சரிக்கை!

டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலமும், போர்நிறுத்த மீறல்கள் மூலமும் தமது ராஜதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாக்கர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) தெரிவித்துள்ளார்.

தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், அழுத்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தாம் தயாரில்லை என சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

"பேச்சுவார்த்தை மேசையை ஒரு சரணாகதி மேசையாக (Table of surrender) மாற்றவே வாஷிங்டன் முயற்சிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதற்ற நிலைமை தொடர்ந்தும் அதிகரிக்குமானால், போர்க்களத்தில் புதிய போர் உத்திகளை வெளிப்படுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.